தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கரும்பை ருசி பார்த்த யானைகள் வனப்பகுதிக்குள் செல்ல மறுப்பு

கரும்பை ருசி பார்த்த யானைகள் வனப்பகுதிக்குள் செல்ல மறுப்பு

கரும்பை ருசி பார்த்த யானைகள் வனப்பகுதிக்குள் செல்ல மறுப்பு


ADDED : ஜன 11, 2024 09:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2024 09:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்;குன்னுாரில் முகாமிட்ட காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட திணறி வருகின்றனர்.

குன்னுார் நான்சச் பகுதியில் முகாமிட்ட, 8 காட்டு யானைகள் நேற்று முன்தினம் கிளண்டேல் தேயிலை எஸ்டேட்டில் முகாமிட்டது.

குன்னுார் ரேஞ்சர் ரவீந்தர் தலைமையில், பாரஸ்டர்கள் ராஜ்குமார், கோபால கிருஷ்ணன், கார்டு திலீப் உட்பட வேட்டை தடுப்பு காவலர்கள் சப்தம் எழுப்பி விரட்டினர்.

மீண்டும், நான்சச் பகுதிக்கு செல்லும் என்பதால் ரன்னிமேடு வனப்பகுதிக்குள் விரட்ட நீண்ட நேரம் போராடினர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். எனினும், யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் தேயிலை தோட்டத்திலேயே போக்கு காட்டியது.

இரவில் மீண்டும் நான்சச் செல்வதை தடுத்தனர். நேற்று காலை மீண்டும் கிளண்டேல் எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. அங்கு தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us