/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் மலையில் உலா வரும் யானைகள்
/
குன்னுார் மலையில் உலா வரும் யானைகள்
ADDED : ஜன 28, 2025 04:58 AM

குன்னுார் : குன்னுார் மலைப்பாதையில் இரு குழுவாக பிரிந்து, 10 காட்டு யானைகள் உலா வருகின்றன.
குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோர வனப் பகுதிகளில், 10 யானைகள் முகாமிட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதங்களில், 11 யானைகள் உலா வந்தன. அதில், சமீபத்தில், ஒரு பெண் யானை மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பலியானது. தற்போது, 10 யானைகள், இரு குழுக்களாக பிரிந்து உணவை தேடி செல்கின்றன.
இதில் கடந்த ஒரு வாரமாக, குட்டியுடன் ஐந்து யானைகள், கன்னிமாரியம்மன் வடுகத்தோட்டம், மரப்பாலம், ஹில் குரோவ், சிங்காரா தேயிலை எஸ்டேட் பகுதியில் உலா வந்தன. மற்றொரு பிரிவு கே.என்.ஆர்., குரும்பாடி, பர்லியார் பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இதனால், தேயிலை தோட்டங்களில் இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இப்பகுதியில், குன்னுார் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதியில், 10 யானைகள் இரு பிரிவுகளாக உலா வருவதால் தோட்ட தொழிலாளர்கள் மிகவும் எச்சரிகையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலையில் இரவில் வரும் வாகனங்கள் மித வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும்,' என்றனர்.