ADDED : மார் 05, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்:ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கூடலுார் பகுதியில், 150 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதில், 230 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதி சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது.
ஆனால், இம்மாதம் நேற்று வரை இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், குடும்ப செலவுகளுக்கும், அங்கன்வாடி மையம் தொடர்பான பணிகளுக்கும் பணம் இல்லாமல் தள்ளாடி வருகின்றனர். எனவே, சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

