/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழக தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளாவில் வேலை வாய்ப்பு! நிலச்சரிவுக்கு பின் மீண்டு வரும் தேயிலை தொழில்
/
தமிழக தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளாவில் வேலை வாய்ப்பு! நிலச்சரிவுக்கு பின் மீண்டு வரும் தேயிலை தொழில்
தமிழக தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளாவில் வேலை வாய்ப்பு! நிலச்சரிவுக்கு பின் மீண்டு வரும் தேயிலை தொழில்
தமிழக தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளாவில் வேலை வாய்ப்பு! நிலச்சரிவுக்கு பின் மீண்டு வரும் தேயிலை தொழில்
ADDED : அக் 11, 2024 10:07 PM

பந்தலூர் : கேரளா வயநாடு சூரல்மலை, அட்டமலை, முண்டக்கை பகுதிகளில், தமிழக தோட்ட தொழிலாளர்கள் நாள்தோறும் பணிக்கு அழைத்து செல்லப்படுவதால், பல குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.
கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே, புஞ்சிரிமட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், முண்டக்கை- சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன.
இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், நிலச்சரிவில் புதைந்ததுடன், இடிந்து தரைமட்டமானது.
தொழிலாளர் பற்றாக்குறை
இங்கு உள்ள தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள், மண்சரிவில் சிக்கி பலியானதுடன், பலரும் மண்ணில் புதைந்து காணாமல் போயுள்ளனர்.
இதனால், இதனை ஒட்டிய பகுதிகளில், மிஞ்சியிருந்த குடியிருப்புகளில் இருந்தவர்கள், வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேயிலை தோட்டங்களில் பணியாற்ற தொழிலாளர்கள் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தமிழகத்திற்கு உட்பட்ட சேரம்பாடி, உப்பட்டி, கொளப்பள்ளி, பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 40க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் நாள்தோறும் தொழிலாளர்கள் வேலைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
ஒரு கிலோவுக்கு, 7 ரூபாய்
இங்கு தனியார் ஒருவர் தேயிலை பறிக்க ஒப்பந்தம் எடுத்துள்ள நிலையில், ஒரு கிலோ தேயிலை பறிக்க, 7 -ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது.
தினசரி ஒவ்வொரு தொழிலாளியும், 100 கிலோ வரை தேயிலை பறிப்பதால், போதிய வருவாய் கிடைத்து வருகிறது. அத்துடன் ஜீப்புகளுக்கு தனியாக வாடகையும் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் தமிழகத்திற்கு உட்பட்ட பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்த தோட்ட தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். தினசரி காலையில் தொழிலாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று, தொழிலாளர்களை வாகனங்களில் அழைத்து சென்று, மாலையில் மீண்டும் கொண்டு வந்து விடுவதால், தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியும் கிடைத்து வருகிறது.
சேரம்பாடியை சேர்ந்த தோட்ட தொழிலாளி அம்சா கூறியதாவது:
மாநில எல்லையில் வாழ்ந்து வரும் எங்களுக்கு தேயிலை தோட்ட தொழில் நன்றாக தெரியும். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நடந்த நிலச்சரிவுக்கு பின், அப்பகுதிக்கு பணிக்கு செல்ல அச்சம் ஏற்பட்டது. தற்போது அங்கு நிலைமை மாறி உள்ளது.
அனைவரும் தேயிலை தோட்டத்துக்கு பணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர். தொழிலாளர் பற்றாக்குறையால், தமிழகத்தில் வாழும் எலையோர கிராம மக்களையும் நாள்தோறும் அழைத்து செல்கின்றனர்.
தேயிலை பறிப்பதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. ஒரு கிலோ பறித்தால், 7 ரூபாய் வழங்கப்படுகிறது.
நாம் எவ்வளவு கிலோ வேண்டுமானாலும் பறிக்கலாம். அதற்கான கூலி வழங்குகின்றனர். மாலையில் வீடுக்கும் கொண்டு வந்து விடவதால் எவ்வித பிரச்னையும் இல்லை. இவ்வாறுஅவர் கூறினார்.