/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வசீகரிக்கும் காட்டேரி பூங்கா கட்டண உயர்வால் கூட்டம் குறைவு
/
வசீகரிக்கும் காட்டேரி பூங்கா கட்டண உயர்வால் கூட்டம் குறைவு
வசீகரிக்கும் காட்டேரி பூங்கா கட்டண உயர்வால் கூட்டம் குறைவு
வசீகரிக்கும் காட்டேரி பூங்கா கட்டண உயர்வால் கூட்டம் குறைவு
ADDED : நவ 17, 2024 10:11 PM
குன்னுார்;
குன்னுாரில் பசுமையாக காட்சியளித்து அனைவரையம் வசீகரிக்கும் காட்டேரி பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைபாதையில், அருவி, பசுமையான மலைகள், தேயிலை தோட்டம், ரன்னிமேடு ரயில் நிலையம் இடையே அமைந்துள்ள காட்டேரி பூங்கா மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்யும் மழையும், மேகமூட்டமும் இங்கு சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.
எனினும், தற்போது குறைந்தளவில் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், இதமான கால நிலையில், செல்பி, மற்றும் போட்டோக்கள் எடுக்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த காலங்களில் கேமராவுக்கு, 50 ரூபாய்; வீடியோ கேமராவுக்கு, 100 ரூபாய் என இருந்ததால், திருமண புகைப்பட, வீடியோ ஆல்பம் எடுக்க நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புகைப்படக்காரர்கள் அதிகம் வருகை தந்தனர்.
ஆனால், சமீபத்தில் திடீரென கேமராக்களுக்கு, 5000 ரூபாய் கட்டணம் வாங்கி பல மடங்கு உயர்த்தியதால், தற்போது யாரும் வருவதில்லை. இதனால், தோட்டக்கலை துறைக்கு வருவாயும் குறைந்துள்ளது.