/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு: உடனே அகற்ற வலியுறுத்தல்
/
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு: உடனே அகற்ற வலியுறுத்தல்
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு: உடனே அகற்ற வலியுறுத்தல்
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு: உடனே அகற்ற வலியுறுத்தல்
ADDED : நவ 27, 2025 01:32 AM
குன்னுார்: 'குன்னுார் நகராட்சியில் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டுவதை தடுக்க வேண்டும்,' என, நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குன்னுார் நகராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது. தலைவர் லலிதா தலைமை வகித்தார்.
கவுன்சிலர் ஜாகிர் :: நவ.,4 துவங்கி டிச., 4., வரை நடந்து வரும் எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குன்னுாரில், 75 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில், பி.எல்.ஓ., க்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மழையால் வீடுகளுக்கு சென்று ஒதுங்கி நிற்கின்றனர். கால அவகாசம் அளிக்க வேண்டும். நகர மன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தீர்மானங்கள் மீண்டும் அடுத்த அஜென்டாவில் எவ்வாறு கொண்டு வரப்படுகிறது.
சரவணகுமார் : எம்.ஜி.ஆர்., நகரில் கழிவுநீர் கால்வாய் பணிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நகர்புற சுகாதார மையம் அருகே கழிவுநீர் வருவதை தலைவரும் ஆய்வு செய்தார். இதற்கான நிதி ஒதுக்கி சரி செய்ய வேண்டும்.
குருமூர்த்தி : ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே பணிகள் மேற்கொள்வதால் பாதிப்பு உள்ளது.
நடைபாதைக்கு தடுப்பு இல்லாததால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
மணிகண்டன் : வி.பி., தெருவில் மார்க்கெட் வரை 'பேட்ச்' பணிக்கு 5 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கி முழுமையாக சீரமைக்கலாம்.
உமாராணி : வார்டில் நடைபாதை பணிகள் மேற்கொள்ள உள்ள நிலையில், கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதனை முதலில் சரி செய்ய நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும். சமுதாய கூடம் கொண்டு வர வேண்டும். சிலர் இங்குள்ள அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, கட்டடம் கட்டி வாடகைக்கு விடுகின்றனர். அதனை ஆய்வு செய்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெகநாதன் : பிளாக் லிஸ்டில் கொண்டு வரப்பட்ட ஒப்பந்ததாரருக்கு பணிகள் கொடுத்ததால், மூன்றே மாதத்தில் கதவு உடைந்தது. தரமில்லாத பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு மீண்டும் பணிகள் வழங்க கூடாது.
ராஜ்குமார் : எஸ்.ஏ.டி.பி., திட்டத்தில் குழாய் பணிகள் மேற்கொண்டு நடைபாதைக்கு மேற்பகுதியில் உள்ளது. அதில், சாக்கடை நீர் கலக்கும் அபாயம் உள்ளது.
தொடர்ந்து, பெரும்பாலான கவுன்சிலர்கள் தெரு விளக்குகள், கழிவுநீர் பிரச்னை குறித்து தெரிவித்தனர். அனைத்து கோரிக்கைக்கும் தீர்வு காண்பதாக, கமிஷனர் இளம்பரிதி உறுதி அளித்தார்.

