/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அழிந்து வரும் ஊசிக்கலா செடிகள்; பாதுகாக்க நடவடிக்கை தேவை
/
அழிந்து வரும் ஊசிக்கலா செடிகள்; பாதுகாக்க நடவடிக்கை தேவை
அழிந்து வரும் ஊசிக்கலா செடிகள்; பாதுகாக்க நடவடிக்கை தேவை
அழிந்து வரும் ஊசிக்கலா செடிகள்; பாதுகாக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 01, 2025 09:43 PM

கோத்தகிரி; நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் இயற்கையாக விளையும் குரங்குபழம், ஊசிக்கலா, தவிட்டுபழம், நகாபழம் ஆகியவை விலங்குகளுக்கான முக்கிய உணவாக இருந்தன. தற்போது வனம் அழிந்து வருவதால், இவ்வகை பழங்களும் குறைந்து வருகின்றன.
அதில், 'பெர் பெரிஸ் நீலகிரி நிஸ்' என அழைக்கப்படும் ஊசிக்கலா செடிகளும் அழிந்து வருகின்றன. இந்த செடிகளில் வயலட் வண்ணத்தில் பழுக்கும் பழங்களை, கிராம புற மக்கள் ஆசையுடன் பறித்து உண்ணுகின்றனர். தவிர, கரடி உள்ளிட்ட வன விலங்குகளுக்கு இந்த பழம் மிகவும் பிடித்தமானதாக உள்ளது. தற்போது, இந்த தாவரம் அழியும் நிலையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள கேர்க்கம்பை பகுதியில், குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டும் இந்த செடிகள் பரவலாக காணப்படுகின்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ கூறுகையில்,''நீலகிரியில் ஊசிக்கலா செடிகள் பெரும்பாலும் அழியும் தருவாயில் உள்ளன. கோத்தகிரி கேர்கம்பை பகுதியில், ஊசிசெடிகள் அதிகளவில் காணப்படுகின்றன. அழியும் தருவாயில் உள்ள செடிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.