/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காடுகளில் அழிந்து வரும் அயனி பலா மரங்கள்: வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம்
/
காடுகளில் அழிந்து வரும் அயனி பலா மரங்கள்: வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம்
காடுகளில் அழிந்து வரும் அயனி பலா மரங்கள்: வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம்
காடுகளில் அழிந்து வரும் அயனி பலா மரங்கள்: வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம்
ADDED : ஜன 12, 2024 11:23 PM

கூடலுார்:கூடலுார் காடுகளில், வன விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்து வரும் அயனி பலா மரங்கள் அழிவின் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளன.
கூடலுார் பகுதி பசுமை மாறா இயற்கை வனங்களை கொண்ட முக்கிய பகுதியாகும். இதனால், இப்பகுதி வனவிலங்குகள், பறவைகளின் முக்கிய வாழ்வு இடமாக உள்ளது. பழங்களை நம்பி வாழும் சிறிய வன உயிரினங்கள், பறவைகள் உணவு தேவையை, மரங்களில் உள்ள பழங்கள் பூர்த்தி செய்து வருகிறது. அவற்றில் முக்கியமானது அயனி பலா பழங்கள்.
பசுமை வனங்களில் அதிக அளவில் காணப்பட்ட இந்த மரங்கள் 'பர்னிச்சர்' தேவைக்காக வனக் கொள்ளையர்களால் பெரும் அளவில் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தாலும் பெருமளவில் அழிந்து வருகிறது. தற்போது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே இந்த மரங்கள் காணப்படுகிறது.
மேலும், கோடையில் வரும் வனத்தீ, அடி காடு சுத்தம் செய்தல் போன்ற காரணங்களால் புதிய நாற்றுகள் உருவாவது தடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களால், இதனை நம்பி வனத்தில் வாழும் குரங்கு, அணில் போன்ற சிறிய வன உயிரினங்கள், பறவைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
தாவர ஆய்வாளர்கள் கூறுகையில்,'அயனி பலா மரங்கள் பசுமை மாறா காடுகளில் மட்டுமே காணப்படும். 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த மரங்கள், 100 ஆண்டுகள் வரை வன விலங்குகளுக்கு பயன் தரக்கூடியவை.
இவை அழிந்து வருவதால், வன உயிரினங்களுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். இதன் விதைகளை வனத்துறையினர் சேகரித்து, மரங்களை அதிகளவில் வளர்ந்து அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும்,'என்றனர்.