/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொறியாளர் சங்கம் முற்றுகை போராட்டம்
/
பொறியாளர் சங்கம் முற்றுகை போராட்டம்
ADDED : டிச 16, 2024 09:08 PM
ஊட்டி; நீலகிரி கட்டட பொறியாளர் சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு, நீலகிரி கட்டட பொறியாளர் சங்க தலைவர் திலக், செயலாளர் மாதேஷ், பொருளாளர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதில், செயலாளர் மாதேஷ் கூறுகையில்,''கட்டுமான தொழிலை நம்பி பிழைக்கும் பலதரப்பட்ட தொழிலாளர்கள் நீண்ட காலமாக பாதிப்படைந்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக, 11 சதவிகிதம் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
ஆனால், ஊட்டியில் கட்டட அனுமதி கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்காமல் உள்ளது. மாவட்ட கட்டட அனுமதி குழுவின் தலைவராக உள்ள கலெக்டர் காலதாமதத்துக்கான காரணத்தை வெளிப்படையாக கூற வேண்டும். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,'' என்றார்.

