/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'நோய் தவிர்க்க சத்தான உணவுகளை ருசிக்கலாம்' : சிறு தானிய உணவகம் திறப்பு
/
'நோய் தவிர்க்க சத்தான உணவுகளை ருசிக்கலாம்' : சிறு தானிய உணவகம் திறப்பு
'நோய் தவிர்க்க சத்தான உணவுகளை ருசிக்கலாம்' : சிறு தானிய உணவகம் திறப்பு
'நோய் தவிர்க்க சத்தான உணவுகளை ருசிக்கலாம்' : சிறு தானிய உணவகம் திறப்பு
ADDED : அக் 31, 2025 11:55 PM

ஊட்டி: நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் மருத்துவ நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு சத்தான உணவு வழங்கும் விதமாக தோடர் பழங்குடியின பெண்கள் நடத்தும் சிறு தானிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
ஊட்டி அருகே, 143.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டது. சிம்லாவிற்கு அடுத்த படியாக மலைப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மருத்துவ கல்லூரி என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் எம்.ஆர்.ஐ.,சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. மேலும், 12 அறுவை சிகிச்சை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பழங்குடி மக்களுக்கென தனியாக, 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள் ளன. ஆனால், போதிய உணவக வசதி இல்லாததால் தொலைவில் உள்ள பிங்கர் போஸ்ட் பகுதிக்கு சென்று வர வேண்டிய நிலை காணப்படுகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மகளிர் மேம்பாட்டு திட்டம் வாயிலாக தோடர் பழங்குடியின மக்கள் நடத்தும் வகையில் சிறுதானிய உணவகம் நேற்று திறக்கப்பட்டது.கலெக்டர் லட்சுமி பவ்யா திறந்து வைத்தார். ' உண வகத்தில் தயார் செய்யப்பட்ட சிறு தானிய உணவு களை சாப்பிட்டு ஆய்வு செய்த கலெக்டர் தரமான உணவுகள் கிடைக்கும் வகையில் நாள்தோறும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் இந்த சிறுதானிய உணவை சாப்பிடலாம்.'' என்றார்.
இந்தக் கடையில் தினந்தோறும் ராகி களி, ராகி தோசை, இட்லி என பல்வேறு சத்தான உணவுகள் குறைந்த விலையில் வழங்கபட உள்ளது.

