ADDED : ஜூன் 22, 2026 04:54 AM

கூடலுார்: கூடலுார் புளியம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ பேசுகையில், ''சுற்றுச்சூழல், தற்போதைய காலநிலை மாற்றத்தால் பசுபிக் கடலின் வெப்பநிலை, 5 டிகிரி சென்டிகிரேட் வரை உயரும் ஆபத்து உள்ளது.
நமது நாட்டின் உணவு உற்பத்தியில், 80 சதவீதம் தென்மேற்கு பருவமழையை சார்ந்துள்ளது. வெப்பநிலை உயர்வால், 2027, பிப்., பேரிடர் பாதிப்பு ஏற்படலாம் என, ஐக்கிய நாட்டு சபை எச்சரித்துள்ளது. பருவமழை, 10 சதவீதம் குறைந்தால் கூட விவசாயத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
நிலத்தடி நீர் குறைந்து, வறட்சி ஏற்படும் ஆபத்து உள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். பூமி பல பேரிடர்களை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது,'' என்றார். ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
