/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி; மரக்கன்றுகள் வினியோகம்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி; மரக்கன்றுகள் வினியோகம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி; மரக்கன்றுகள் வினியோகம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி; மரக்கன்றுகள் வினியோகம்
ADDED : டிச 01, 2024 10:49 PM

கோத்தகிரி; கோத்தகிரி முஸ்லிம் சுன்னத் ஜமா அத் மஸ்ஜித் பரிபாலன சபை சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைவர் தாஜ்தீன் தலைமை வகித்தார். துணை தலைவர் பாபா சிக்கந்தர் முன்னிலை வகித்தார். அதில், தமிழ்நாடு அறிவியல் இருக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம், 2030ல் முழுமையாக தெரிய வரலாம். அப்போது, பூமியின் வெப்பநிலை, 1.5 டிகிரி செல்சிசை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், உணவு உற்பத்தி, குடிநீர் தேவை, ஆற்றல் வளம் மற்றும் பலவிதமான தொற்று நோய்கள் என சிக்கல்களை மனித குலம் எதிர்கொள்ளும். புதிய அறிவியல் தொழில் நுட்பங்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர் கொள்ளும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். நேனோ தொழில்நுட்பம், வருங்காலத்தில் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொள்ளும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்கால சுற்றுச்சூழல் பிரச்னைகள் அனைத்தையும் எதிர்கொள்ள மரக்கன்றுகள் நடவு செய்வதுதான் முக்கிய மருந்தாக உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். தொழுகைக்கு வந்திருந்த அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பழ மரக்கன்றுகளை தங்களது வீடுகளில் நடவு செய்வதற்காக, வாங்கி சென்றனர். சபை செயலாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.