/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சூழலுக்கு பாதிப்பு இல்லாத விநாயகர் சிலைகள் அவசியம்; மாவட்ட நிர்வாகம் அறிவுரை
/
சூழலுக்கு பாதிப்பு இல்லாத விநாயகர் சிலைகள் அவசியம்; மாவட்ட நிர்வாகம் அறிவுரை
சூழலுக்கு பாதிப்பு இல்லாத விநாயகர் சிலைகள் அவசியம்; மாவட்ட நிர்வாகம் அறிவுரை
சூழலுக்கு பாதிப்பு இல்லாத விநாயகர் சிலைகள் அவசியம்; மாவட்ட நிர்வாகம் அறிவுரை
ADDED : ஆக 03, 2025 08:33 PM
ஊட்டி; 'நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல் படி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவை இல்லாத சுற்று சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்பான முறையில் நீர்நிலையில் கரைக்க வேண்டும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு, உலர்ந்த மலர் கூறுகளையும், பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களில் பிசின்களை பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதி இல்லை.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகளை தயாரிக்கவும், பந்தல் அலங்கரிக்கவும் பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் மற்றும் வண்ண பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.
பிரசாத வினியோகத்திற்கு, மட்கும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள், கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தலாம். குப்பைகளை உடனடியாக பிரித்து அப்புறப்படுத்த வேண்டும். குப்பை கழிவுகளை பொறுப்பற்று கொட்ட கூடாது. எல்.இ.டி., பல்புகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகளை பயன்படுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும். அதன்படி, குன்னுார் லாஸ் நீர்வீழ்ச்சி, ஊட்டியில் காமராஜர் சாகர் அணை, கோத்தகிரியில் உயிலட்டி நீர்வீழ்ச்சி, கூடலுாரில் இரும்பு பாலம் ஆறு மற்றும் பந்தலுாரில் பொன்னானி ஆற்றில் மட்டுமே, விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

