/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உருக்குலைந்த வயநாடு உதவிய எப்பநாடு
/
உருக்குலைந்த வயநாடு உதவிய எப்பநாடு
ADDED : செப் 30, 2024 04:36 AM
கோத்தகிரி : கேரள மாநிலம், வயநாடு பேரிடர் பாதிப்புக்கு, எப்பநாடு கிராம மக்கள் ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.
சமீபத்தில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்பில், மண்ணுக்குள் புதைந்து நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பலர், வீடுகளையும், சொத்துக்களையும், உறவுகளையும் இழந்து பரிதவித்து வருகின்றனர். நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு உட்பட, அனைத்து தரப்பு மக்களும் உதவி வருகின்றனர்.
அதன்படி, ஊட்டி எப்பநாடு கிராம மக்கள் ஒருங்கிணைந்து திரட்டிய, ஒரு லட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை, ஊர் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்கள் நேற்று முன்தினம், கலெக்டர் லட்சுமி பவ்யாவை நேரில் சந்தித்து வழங்கினர். அவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.