ADDED : ஜன 15, 2024 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;மாவட்ட மத நல்லிணக்க ஒருமைப்பாடு அமைதிக்குழு சார்பில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட் மொத்த அரிசி வணிக வளாகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மதங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதில், பிரம்மா குமாரிகள் அமைப்பின் சகோதரி சரஸ்வதி மற்றும் மத தலைவர்கள், நல்லிணக்க ஒருமைபாடு குறித்து பேசினர்.
தொடர்ந்து, பொங்கல் இனிப்பு வழங்கப்பட்டது. இதில், அனைத்து மதங்களை சேர்ந்த வியாபாரிகள்; மக்கள் திரளாக பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, நீலகிரி மாவட்ட மத நல்லிணக்க ஒருமைப்பாடு அமைதி குழுவினர் செய்திருந்தனர்.