/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புனித செபஸ்தியார் ஆலயத்தில் நற்செய்தி பெருவிழா
/
புனித செபஸ்தியார் ஆலயத்தில் நற்செய்தி பெருவிழா
ADDED : மார் 28, 2025 03:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் புனித செபஸ்தியார் ஆலயத்தில், நற்செய்தி பெருவிழா நடந்தது.
ஆலய பங்குத்தந்தை பாபு சக்கியத் தலைமை வகித்தார். அட்டப்பாடி செகியோன் தியான மடத்தை சேர்ந்த சோஜி ஒலிக்கல் முன்னிலையில், 12 பேர் அடங்கிய குழுவினர், பெருவிழாவை துவக்கி வைத்து, நற்செய்திகளை வழங்கினர்.
தொடர்ந்து, முதல் கவுன்சிலிங், பாவ சங்கீர்த்தனம் உட்பட பல்வேறு நற்செய்திகள் இடம் பெற்றது.
ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி, பயஸ், பென்னி மற்றும் சஞ்சு உட்பட பலர் செய்திருந்தனர். குன்னுார் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.