/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒருநாள் மழைக்கு கூட வெள்ளக்காடாக மாறும்.. இரண்டாம் சிரப்புஞ்சி! கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது கட்டாயம்
/
ஒருநாள் மழைக்கு கூட வெள்ளக்காடாக மாறும்.. இரண்டாம் சிரப்புஞ்சி! கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது கட்டாயம்
ஒருநாள் மழைக்கு கூட வெள்ளக்காடாக மாறும்.. இரண்டாம் சிரப்புஞ்சி! கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது கட்டாயம்
ஒருநாள் மழைக்கு கூட வெள்ளக்காடாக மாறும்.. இரண்டாம் சிரப்புஞ்சி! கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது கட்டாயம்
ADDED : ஆக 29, 2025 09:10 PM

பந்தலுார்; ஒருநாள் மழைக்கு தாங்காத இரண்டாவது சிரப்புஞ்சியில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாக மாறி உள்ளது. பந்தலுார் அருகே தேவாலா பகுதி, இரண்டாவது சிரப்புஞ்சி என்ற பெயரை கொண்டு உள்ளது.
மேகாலயா மாநிலத்தில் உள்ள சிரபுஞ்சிக்கு அடுத்தபடியாக, மழை பொழிவு மற்றும் குளிரான காலநிலை நிலவி வந்த பகுதி, காலநிலை மாற்றம், இயற்கை சூழல் அழிவு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் போது வெள்ளம் சூழ்ந்து வருவது வாடிக்கையாகி விட்டது.
மேலும், இதன் அருகே உள்ள, பந்தலுார் பகுதியில்  கடந்த ஆண்டு ஆக., மாதம் ஒரு மணி நேரம் பெய்த, 28 செ.மீ. மழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகள், விவசாய தோட்டங்கள் நீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டது. விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர்.
கட்டமைப்பு வசதிக்கு குரல் அப்போதே, 'உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, மழை நீர் வழிந்தோட உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள, மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
ஆனால், மழையின் போது வந்த ஆய்வு செய்த அதிகாரிகள், வெயில் வந்த பின் 'காணாமல்' போயினர்.
இந்நிலையில், கடந்த, 28-ம்தேதி மாலையில், இரண்டு மணிநேரம் பெய்த கனமழையின் போது, 14 செ.மீ. மழைபதிவானது.
சாலைகள், கடைகள், குடியிருப்புகள் மற்றும் விவசாய தோட்டங்களில் மழை வெள்ளம் புகுந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.
பஜாரில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது. தண்ணீர் வடிந்து செல்ல, 24 மணிநேரம் ஆனாது.
காணாமல் போன வடிகால் அமைப்புகள் இதற்கு காரணம், மழை காலங்களில் வெள்ளம் வடிந்து செல்ல கடந்த காலங்களில் கட்டப்பட்ட, 40க்கும் மேற்பட்ட வடிகால் அமைப்புகளை காணவில்லை.  நீரோடைகள்; ஆற்றுபடுகைகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் மழைநீர் தேங்க காரணமாக மாறி உள்ளன.
அத்துடன் இப்பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் தோட்டங்கள் கட்டட காடுகளாக மாறி இயற்கை சூழலை அழிந்துள்ளன.  இதனால், ஒரே நேரத்தில் அதிக மழை, மேகவெடிப்பு ஏற்பட்டால் இப்பகுதி யில் பேரிடர் ஏற்படும் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.

