/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'உடல் தளர்ந்தாலும் எங்கள் உள்ளம் தளரவில்லை'; அசத்தும் எலும்பு சிதைவு நோய் பாதித்த சகோதரிகள் இன்று தேசிய மாற்றுத் திறனாளிகள் தினம்

ADDED : டிச 03, 2024 05:54 AM

பந்தலுார்; பந்தலுார் அருகே, எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சகோதரிகள் உள்ளம் தளராமல், சுய தொழிலை பயின்று பல்வேறு கலை பொருட்களை செய்து அசத்தி வருகின்றனர்.
பந்தலுார் அருகே பாட்டவயல் கரும்பன்மூலா கிராமத்தை சேர்ந்த ஷைனுதீன்- சீனத் தம்பதியரின் மகள்கள், பிளஸ்-2 படித்துள்ள பாத்திமத்து சுகைலா,-21; பதினோராம் வகுப்பு படிக்கும் ஷப்னா ஜாஸ்மின்,-17. இருவருக்கும் எலும்பு சிதைவு நோய் உள்ளதால், எழுந்து நடக்கவும், நீண்ட நேரம் உட்காரவும் முடியாது.
தளராத தன்னம்பிக்கை
எனினும், தங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கையில், அரசு பொது தேர்வுகளை எழுதி சாதித்துள்ள இந்த சகோதரிகள், தற்போது சுயதொழில் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில், சுகைலா, 'வண்ண காகிதங்களில் பூக்கள் செய்வது; தையல் வேலைபாடுகளை செய்வது,' என, தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார்.
இவரின் தங்கை ஜாஸ்மின் படுத்தப்படியே அழகான ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார். இவர்களின் தாயார் இருவரையும், 24 மணி நேரமும் கவனித்து வருகிறார்.
உதவுமா மாவட்ட நிர்வாகம்?
தந்தை தையல் தொழில் செய்து வரும் நிலையில், போதிய அளவு வருமானம் இல்லாததால் கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று, குழந்தைகளின் மருத்துவ செலவு; வீட்டு செலவுகளை கவனித்து வருகிறார்.
மேலும், குழந்தைகளின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் கல்விக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி தருகிறார்.
ஷைனுதீன் கூறுகையில்-, ''எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள எங்களது மகள்கள், தங்களின் சுய முயற்சியால் வண்ணமயமான கலை பொருட்களை உருவாக்கி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம்; மாற்றுத்திறனாளிகள் நலத்துறை; தொண்டு நிறுவனங்கள், இவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு முன் வர வேண்டும்.
இதனால், அவர்கள் மகிழ்ச்சி அடைவதுடன் மனதளவில் ஊக்கம் கிடைக்கும்,'' என்றார்.