/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒவ்வொரு கீரையும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம்; மருத்துவத்துறை இணை பேராசிரியர் அறிவுரை
/
ஒவ்வொரு கீரையும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம்; மருத்துவத்துறை இணை பேராசிரியர் அறிவுரை
ஒவ்வொரு கீரையும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம்; மருத்துவத்துறை இணை பேராசிரியர் அறிவுரை
ஒவ்வொரு கீரையும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம்; மருத்துவத்துறை இணை பேராசிரியர் அறிவுரை
ADDED : டிச 25, 2024 08:00 PM

ஊட்டி; 'ஒவ்வொரு கீரையும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட கீரை வகைகள் உள்ளன. இவற்றுள், 20 வகை கீரைகளை மட்டுமே வாரத்தில் இரு முறையோ, மூன்று முறையோ பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு கீரையிலும் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும், தாது பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும்.
கீரைகளின் பயன்கள்
நீரிழிவு நோயாளிகளின் ரத்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்துதல், புற்றுநோயின் அபாயத்தை குறைத்தல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் ஆகியவை கீரையை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய நன்மைகளாகும்.
கீரை ஒரு சத்தான இலை; பச்சை காய்கறியாகும். இதேபோல, முடி மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தவிர, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ரத்த சோகையை நீக்கவும் மற்றும் நரம்புகளை திறக்கவும் உதவுகிறது.
ஊட்டியில் கிடைக்கும் வகைகள்
பொன்னாங்கன்னி கீரை, புளிச்சகீரை, அரைக்கீரை, சிறு கீரை, அகத்திக்கீரை, கடுகுக் கீரை, கொத்தமல்லி கீரை, முள்ளங்கி கீரை, பீட்ரூட் கீரை, பெரண்டைய் கீரை, மணத்தக்காளி கீரை, தண்டு கீரை, வெந்தய கீரை, பாலக் கீரை, முடக்கத்தான் கீரை உள்ளிட்ட பல வகை கீரை வகைகள் விற்பனைக்கு வருகிறது. இவற்றில் சில வகை கீரைகளை மட்டுமே உணவாக பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். கீரைகளை உணவில் அதிகளவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டும்.
கீரை வியாபாரிகள் கூறுகையில், ''ஊட்டி மார்க்கெட் டில், 15க்கு மேற்பட்ட கீரைவகைகள் அன்றாடம் விற்பனைக்கு வருகிறது. கீரை வகைகளை மக்கள் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்,''என்றனர்.