ADDED : நவ 17, 2026 05:06 PM

அ நிறம் | அளவு
பாலக்காடு: பாலக்காடு அருகே, தனது விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வண்டித்தாவளம் வடதோடு பூளக்காடு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் முருகதாஸ், 61. இவர், நேற்று (நவ.,16) தனது வயலில் உள்ள நாற்றங்காலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.
அப்போது கால் வழுக்கி, வனவிலங்குகளை தடுப்பதற்காக நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியின் மீது விழுந்தார். இதில், மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற புதுநகரம் போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
