/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழைய நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு உதவிகள் செய்ய முடிவு

ADDED : ஜன 15, 2024 10:46 PM

குன்னுார்;குன்னுாரில் முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
குன்னுார் டி.டி.கே., சாலையில் சி.எஸ்.ஐ., நடுநிலை பள்ளி உள்ளது. பள்ளியில் படித்த மாணவ மாணவியர் தற்போது பல்வேறு இடங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த, 1992ம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்த மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி வகுப்பறைகளில் சென்று அமர்ந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பள்ளி தாளாளர் ஆபிரகாம் ஜோசப், குன்னுாரை சேர்ந்த இமாம் முகமது ஆகியோர் பேசினர். பள்ளியில் படித்து நைஜீரியாவில் பணியாற்றும் ஜேம்ஸ் பள்ளிக்கு சேர்கள் வழங்கினார். ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும், நல உதவிகள் செய்யவும் உறுதி அளித்தனர். தொடர்ந்து நினைவு பரிசுகள் வழங்கி அனைவரும் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.