/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கு வெளிநாட்டு மலர் நாற்றுக்கள் தயார்
/
சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கு வெளிநாட்டு மலர் நாற்றுக்கள் தயார்
சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கு வெளிநாட்டு மலர் நாற்றுக்கள் தயார்
சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கு வெளிநாட்டு மலர் நாற்றுக்கள் தயார்
ADDED : ஜன 26, 2025 11:02 PM

குன்னுார், ; குன்னுார் சிம்ஸ் பூங்காவில் வரும் கோடை சீசனுக்காக வெளிநாடுகளை சேர்ந்த, 20 ரகங்களில், மலர் நாற்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும், மே மாத இறுதியில் பழ கண்காட்சி நடத்தப்படுகிறது. முன்னதாக, ஏப்., மே மாத கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவருவதற்கான லட்சக்கணக்கான மலர் நாற்றுக்கள் தயார் படுத்தப்பட்டுள்ளது.
நடப்பாண்டின் கோடை சீசனை சுற்றுலா பயணிகளை கவர வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, 'கோலிசியஸ், கேலமிக்ஸ்,' உட்பட 20 ரகங்களில், விதைகள் விதைக்கும் பணி சிம்ஸ் பூங்கா நர்சரியில் நடந்து வருகிறது.
'ஆஸ்டர், வெர்பினா, லுாபின், பேன்சி, ஸ்டாக்ஸ், பிளாக்ஸ் மற்றும் ரோஸ், வொயிட், ஒய்லெட்,' உட்பட பல்வேறு வண்ண சால்வியா விதைகள் விதைக்கப்பட்டு நாற்றுக்கள் தயாராகி வருகிறது.