நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்; தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில், மக்களை தேடி மருத்துவ, இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தின் மூலம், அருவங்காடு ஒசட்டி பகுதியில் இலவச காச நோய் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில், 50 க்கும் மேற்பட்ட மக்கள் இலவசமாக 'எக்ஸ்-ரே' எடுத்து கொண்டனர்.
முதன்மை மருத்துவ பரிசோதகர் சரத்குமார், சுகாதார அமைப்பு சுகாதார நிலைய மேற்பார்வையாளர் ஆண்டனி செபஸ்டின், அருவங்காடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.