/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெடிமருந்து தொழிற்சாலை ஓணம் திருவிழா கோலாகலம்
/
வெடிமருந்து தொழிற்சாலை ஓணம் திருவிழா கோலாகலம்
ADDED : நவ 12, 2024 06:08 AM

குன்னுார்; அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கைரளி அமைப்பு சார்பில், ஓணம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வெடிமருந்து தொழிற்சாலை பொது மேளாளர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கைரளி தலைவர் நவீன் ஜேம்ஸ் தலைமை வகித்தார். செயலாளர் பிரேம்ஜி, மகளிர் அணி செயலாளர் நிஷா திலீப், இணை செயலாளர் பிமோத், ஊட்டி 'ஒருமா' அமைப்பு தலைவர் நித்ய சத்யா ஆகியோர் பேசினர்.
ஓண சத்யா, விளையாட்டு போட்டிகள், பரதநாட்டியம், கைரளி உறுப்பினர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மலையாள மிஷின் மாணவர்களின் கலாசார ஊர்வலத்தில், மாவேலி மன்னன் வாமனன் அவதாரத்தை சிறப்பிக்கும் வகையில், வேடமணிந்து பங்கேற்றது அனைவரையும் கவர்ந்தது.