/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியை மூடக்கூடாது; தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
/
வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியை மூடக்கூடாது; தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியை மூடக்கூடாது; தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியை மூடக்கூடாது; தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 31, 2025 09:38 PM
குன்னுார்; 'அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை பள்ளியை மூடும் நடவடிக்கையை கைவிட்டு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிலாளர் பிரதிநிதிகள் ஜோசிலாசர், அசோகன், மூர்த்தி ஆகியோர் நீலகிரி எம்.பி., ராஜாவிடம் அளித்த மனு:
அருவங்காடு, கார்டைட் தொழிற்சாலை மேல்நிலை பள்ளியில், பள்ளி செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது மற்றும் மாணவர்களை மாநில அரசு பள்ளிகளுக்கு மாற்றுவது தொடர்பாக கடந்த, 2024ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பள்ளி தொடர்பாக அரசின் நடவடிக்கை, பணியாளர் பிரதிநிதிகளால் நிறுவப்பட்ட அறக்கட்டளை அல்லது சங்கத்தினரிடம் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து கருத்து கேட்டறியவும், இந்த நிறுவனத்தில் கல்வி நடவடிக்கைகள் தொடர்வதை உறுதிசெய்யவும், பள்ளி மூடல் நடவடிக்கையை தடுக்கவும் வேண்டும்.
தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில்,வேதியியல் உதவியாளர் ஆபரேட்டர் பயிற்சி, என்.சி.வி.டி., பாடதிட்டத்தை மாநில அரசு துவங்க வேண்டும். குன்னுார் அல்லது ஊட்டியில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்களுக்கு இடையே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.