நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுார் அருகே கேத்தி பொறியியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மேட்டுப்பாளையம் 'லோட்டஸ்' கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
அதில், பொதுவான கண்பார்வை பிரச்னை, மற்றும் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 193 மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
சிலர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை, சி.எஸ்.ஐ., கல்லாரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரதாப் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

