/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஈழுவா -தீயா நல சங்க மகளிர் அணி இரண்டாம் ஆண்டு துவக்க விழா
/
ஈழுவா -தீயா நல சங்க மகளிர் அணி இரண்டாம் ஆண்டு துவக்க விழா
ஈழுவா -தீயா நல சங்க மகளிர் அணி இரண்டாம் ஆண்டு துவக்க விழா
ஈழுவா -தீயா நல சங்க மகளிர் அணி இரண்டாம் ஆண்டு துவக்க விழா
ADDED : ஜூன் 29, 2025 10:58 PM

கோத்தகிரி; கோத்தகிரியில் ஈழுவா - தீயா நல சங்க மகளிர் அணி இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
கோத்தகிரி ஈழுவா - தீயா நல சங்கத் செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பேரமைப்பு நிர்வாகிகள், செந்தாமரை, கோரல் விஸ்வநாதன், விஜயலட்சுமி ஆகியோர் பேசினர். விழாவில், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி இடம்பெற்றது. தொடர்ந்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.