ADDED : ஜன 13, 2026 05:23 AM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுாரில் பெய்த மழையின் காரணமாக கெந்தளா, ஆர்செடின் அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று முன்தினம் தொடர் மழை பெய்து வருவதுடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுஉள்ளது.
இந்நிலையில்,கெந்தளா அருகே சாலையில் மரம் விழுந்தது. இதனால், கேத்தி பாலாடா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளுக்கு செல்லும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல, ஆர்செடின் பகுதியில் மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில், முன்னணி தீயணைப்பாளர் முரளி உட்பட தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.
இதனால், ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
