/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமத்தில் விழுந்த மரம்; மின் சப்ளை துண்டிப்பு
/
கிராமத்தில் விழுந்த மரம்; மின் சப்ளை துண்டிப்பு
ADDED : ஜூன் 27, 2025 09:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; கூடலுார்- ஊட்டி சாலை தெய்வமலை கிராமத்தில், சாலையில் மரம் விழுந்து மின் கம்பி சேதம் அடைந்ததால் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.
கூடலுார் நடுவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, ஊட்டி -கூடலுார் தேசிய நெடுஞ்சாலை, 27வது மைல் பகுதியில் இருந்து தெய்வ மலை கிராமத்துக்கு செல்லும் சாலையில் மரம் விழுந்து மின் கம்பி சேதம் அடைந்தது.
மக்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. நடுவட்டம் பேரூராட்சி மீட்டுக் குழுவினர் மரத்தை அகற்றினர்.
மின்துறையினர் மின்கம்பிகளை சீரமைத்து மின் சப்ளை வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

