ADDED : நவ 20, 2024 10:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் கேத்தி அருகே போலீசார் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையில் விழுந்த மரத்தை, தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.
குன்னுார் பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்து வந்தது. தற் போது காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் பல இடங்களிலும் மரங்கள் விழுகின்றன.
இந்நிலையில், நேற்று காலை கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, போலீசார் குடியிருப்பு செல்லும் சாலையில் கற்பூர மரம் விழுந்தது.
தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில், முன்னணி தீயணைப்பாளர் சுப்ரமணி மேற்பார்வையில் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி, மரத்தை வெட்டி அகற்றினர்.