/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விழும் நிலையில் மரம் மக்கள் நடமாட சிரமம்
/
விழும் நிலையில் மரம் மக்கள் நடமாட சிரமம்
ADDED : ஜன 24, 2026 05:07 AM
குன்னுார்: குன்னுார் வண்ணாரப்பேட்டை சாலையோரத்தில், மேரீஸ் பள்ளி விடுதி, மயானம், முதியோர் பாதுகாப்பு மையம் உள்ளது. சாலையோரத்தில் ஏராளமான கற்பூர மரங்கள் விழும் அபாய நிலையில் உள்ளன. இதனால், இவ்வழியாக செல்லும் மாணவ, மாணவியர் உட்பட மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல, இங்கு சாலையோர பகுதிகளில், நீண்ட நாட்களாக அகற்றப்படாத வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால் பாம்பு உட்பட விஷ ஜந்துக்கள் அதிகரித்துள்ளது. எனவே, இவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

