/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் இரட்டிப்பு லாபம் தருவதாக விவசாயிடம் ரூ.18 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
/
ஊட்டியில் இரட்டிப்பு லாபம் தருவதாக விவசாயிடம் ரூ.18 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ஊட்டியில் இரட்டிப்பு லாபம் தருவதாக விவசாயிடம் ரூ.18 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ஊட்டியில் இரட்டிப்பு லாபம் தருவதாக விவசாயிடம் ரூ.18 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 01, 2025 09:48 PM
ஊட்டி; இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி, 'ஆன்லைனில்' வாலிபரிடம், 18 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
ஊட்டியை சேர்ந்த, 32 வயது வாலிபர் ஒருவர் விவசாயம் செய்து வருகிறார். வாலிபரின், மொபைலுக்கு விளம்பரம் ஒன்று வந்தது. அதில், 'ஆன்லைனில் 'டாஸ்க்குகளை' சரியாக முடித்தால் பணம் வழங்கப்படும்,' என, கூறப்பட்டது. அதில், வாலிபருக்கு குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைத்தது.
'ஆன்லைன் முறையில் முதலீடு செய்தால் கூடுதல் அல்லது இரட்டிப்பு லாபம் கிடைக்கும்,' என, அவரிடம் ஆசை வார்த்தை கூறப்பட்டது. முதலில், 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். தொடர்ந்து, பல்வேறு காரணங்களை கூறி அந்த வாலிபரிடம் பல தவணைகளில் ஆன்லைன் முறையில் பணம் பெறப்பட்டுள்ளது. மொத்தம், 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அவருக்கு பணம் ஏதும் கிடைக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த வாலிபர் இது குறித்து 'ஆன்லைன்' மூலம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பின், அந்த வாலிபரை தொடர்பு கொண்டவர்கள், '26 லட்சம் ரூபாய் உங்களுக்கு அனுப்பப்படும். அதற்கு அரசு வரியாக, 7 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்,' என்று, கூறியுள்ளனர். இதை நம்பிய அந்த வாலிபர் மீண்டும், 3 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார். அதன் பின்பும் பணம் வரவில்லை. மொத்தமாக, 18 லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த வாலிபர், இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் பிரவீணா கூறுகையில்,'' வாலிபரின் புகாரை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, 18 லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இரட்டிப்பு லாபம் தருவதாக கூறும் மர்ம நபர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். உடனே சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும்,'' என்றார்.