/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாயி உருவாக்கிய தேன் டீ : வாரிய அதிகாரிகள் பாராட்டு
/
விவசாயி உருவாக்கிய தேன் டீ : வாரிய அதிகாரிகள் பாராட்டு
விவசாயி உருவாக்கிய தேன் டீ : வாரிய அதிகாரிகள் பாராட்டு
விவசாயி உருவாக்கிய தேன் டீ : வாரிய அதிகாரிகள் பாராட்டு
ADDED : ஏப் 02, 2025 10:04 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே இயற்கை விவசாயி தயாரித்துள்ள 'தேன் டீயை' பார்வையிட்ட வாரிய அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
பந்தலுார் அருகே மாங்கோடு கிராமத்தை சேர்ந்தவர் குமரன். இயற்கை விவசாயம் செய்து வரும் இவர், தேயிலை, காபி, இஞ்சி, குறுமிளகு, நெல், மரவள்ளி மற்றும் கீரை வகைகள், காய்கறிகளை இயற்கை விவசாயத்தில் விளைவித்து வருகிறார். இவர் தற்போது, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்,'தேன் டீ' தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
குமரன் கூறுகையில், ''பொதுவாகவே நல்ல நிலையில் விளைவிக்கப்படும் தேயிலை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். அந்த வகையில், 200 மில்லி சுத்தமான தேன், 10 கிராம் 'ஆர்த்தோடெக்ஸ்' டீ துாள் கலந்து ஊறவைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில், பெரியவர்களுக்கு ஒரு ஸ்பூன், சிறியவர்களுக்கு அரை ஸ்பூன் வீதம் கலந்து, காலை மற்றும் மாலை இரண்டு வேளை குடித்து வந்தால் உடலில் சுறுசுறுப்பு உருவாகும்,'' என்றார்.
பந்தலுார் அய்யன் கொல்லியில் சமீபத்தில் நடந்த தேயிலை வாரிய கண் காட்சியில் இதனை கண்ட அதிகாரிகள் குமரனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

