/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இயற்கை உரம் பயன்பாடு; விவசாயிகள் ஆர்வம்
/
இயற்கை உரம் பயன்பாடு; விவசாயிகள் ஆர்வம்
ADDED : செப் 18, 2024 08:40 PM

கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், இயற்கை உரம் பயன்படுத்தி, பயிர் சாகுபடி செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தபடியாக, அதிக பரப்பில் மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த காலங்களில், வேதி உரங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது.
இதனால், நிலம் மலட்டு தன்மை அடைந்து, பயிர்கள் செழித்து வளராமல், காய்கறி மகசூல் குறைந்து, விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டது. ஆனால், இயற்கை உரங்கள் மூலம், உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளுக்கு, சந்தையில் கட்டுப்படியான விலை கிடைப்பதுடன், நுகர்வோரும் ஆர்வத்துடன், காய்கறிகளை வாங்கி செல்வது அதிகரித்துள்ளது.
இதனால், வேதி உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்துவதில், விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'எதிர்வரும் நாட்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், கூடுமானவரை இயற்கை உரங்களை தயாரித்து, விவசாயிகளுக்கு வினியோகிக்க, அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதனால், விவசாயிகள் பயன் பெறுவதுடன், பொது இடங்களில் குப்பைகள் இல்லாமல் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வாய்ப்புள்ளது,' என்றனர்.