sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மலை மாவட்டத்தில் விதை மாதிரி பரிசோதனையில் விவசாயிகளுக்கு ஆர்வமில்லை! தரமான காய்கறி விளைச்சலை அதிகப்படுத்த விழிப்புணர்வு

/

மலை மாவட்டத்தில் விதை மாதிரி பரிசோதனையில் விவசாயிகளுக்கு ஆர்வமில்லை! தரமான காய்கறி விளைச்சலை அதிகப்படுத்த விழிப்புணர்வு

மலை மாவட்டத்தில் விதை மாதிரி பரிசோதனையில் விவசாயிகளுக்கு ஆர்வமில்லை! தரமான காய்கறி விளைச்சலை அதிகப்படுத்த விழிப்புணர்வு

மலை மாவட்டத்தில் விதை மாதிரி பரிசோதனையில் விவசாயிகளுக்கு ஆர்வமில்லை! தரமான காய்கறி விளைச்சலை அதிகப்படுத்த விழிப்புணர்வு


ADDED : ஏப் 11, 2025 09:41 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 09:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில், கடந்த, 2024-25 ஆண்டில், 1,004 விதை மாதிரிகள் மட்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது; சிறு விவசாயிகள் மத்தியில் விதை மாதிரிகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி, 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அதில், மலை காய்கறி விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதில், மாவட்ட வேளாண்மை விதை பரிசோதனை நிலையமும், 'விதைப்பு பணிக்கு முன்பாக, பிரதான காய்கறிகளை கட்டாயம் விதை பரிசோதனைக்கு உட்படுத்திய பின் தான் விதைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தி வருகிறது.

விதைகளில் தரம் முக்கியம்


விதைகள் நல்ல தரத்துடன் இருந்தால் மட்டுமே, பயிர்கள் மற்ற அனைத்து இடு பொருட்களையும் ஏற்று கொண்டு நல்ல முறையில் வளர்ந்து அதிகரித்த விளைச்சலை அளிக்கும். விதைகளை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ, அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்பு பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரியில் விளையும், பிரதான காய்கறிகளான, 'கேரட், காலிப்பிளவர் மற்றும் முட்டைகோஸ் விதை, 10 கிராம்; பீட்ரூட் மற்றும் முள்ளங்கி, 50 கிராம்; பீன்ஸ், 450 கிராம்; பட்டாணி, 250 கிராம்; பாலக்கீரை, 25 கிராம்; புரொக்கோலி, நுால்கோல், டர் நீப் ஆகியவை, 10 கிராம்,' என, பயிருக்கேற்ப குறைந்தபட்ச விதை மாதிரியை, மாவட்ட விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து கட்டாயம் பரிசோதனை செய்த பின் தான் விதைப்பு பணி மேற்கொள்ள வேண்டியது அவசியமாகி உள்ளது

இடை தரகர்களை நம்ப வேண்டாம்


சாகுபடி காலங்களில் விவசாயிகளுக்கு தேவையான காய்கறி விதைகள் , விதை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பெற்று பயிர் செய்ய வேண்டும். விதை உரிமம் பெறாமல் இடைத்தரகர்கள் யாரேனும் நேரடியாக தோட்டங்களுக்கு சென்று விதைகள் விற்பனை செய்தால் விதை கட்டுப்பாட்டு விதிகளின்படி குற்ற செயலாகும்.

விதைகள் வாங்கும் போது விற்பனை ரசீது கட்டாயம் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். விதை சட்டங்களுக்கு முரணாக இடைத்தரகர்கள் யாரேனும் விதைகளை விற்பனை செய்தால் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் நவீன் கூறுகையில், ''விதை மாதிரிகளை கட்டாயம் விதை பரிசோதனைக்கு உட்படுத்திய பின் தான் விதைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். கடந்த, 2024-25 ல் இதுவரை, 1,004 விதை மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அதில், '31 விதை மாதிரிகள் தரமற்றது,' என, கண்டறியப்பட்டுள்ளது. விதை பரிசோதனையில் விவசாயிகள் ஆர்வமில்லாமல் உள்ளனர். இதனால், அரசின் உத்தரவின் படி, நீலகிரியில் உள்ள சிறு விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் ,'' என்றார்.






      Dinamalar
      Follow us