sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காததால் விவசாயிகள் அதிர்ச்சி! ரூ.50 கோடி நிலுவை உள்ளதால் 'நோட்டீஸ்'

/

பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காததால் விவசாயிகள் அதிர்ச்சி! ரூ.50 கோடி நிலுவை உள்ளதால் 'நோட்டீஸ்'

பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காததால் விவசாயிகள் அதிர்ச்சி! ரூ.50 கோடி நிலுவை உள்ளதால் 'நோட்டீஸ்'

பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காததால் விவசாயிகள் அதிர்ச்சி! ரூ.50 கோடி நிலுவை உள்ளதால் 'நோட்டீஸ்'


ADDED : ஜன 08, 2025 10:36 PM

Google News

ADDED : ஜன 08, 2025 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் தேயிலை வாரியம் அறிவித்த, பசுந்தேயிலை நிர்ணய விலையை இதுவரை வழங்காமல் உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலை நம்பி பல்லாயிரக் கணக்கான விவசாயிகள், லட்சக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு, 235 தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள், குன்னுார் ஏல மையம் மற்றும் 'டீசர்வ்' மையங்களில் ஏலம் விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ துாளுக்கு 4 கிலோ பசுந்தேயிலை


ஒரு கிலோ தேயிலை துாள் உற்பத்தி செய்ய, 4 கிலோ பசுந்தேயிலையை, விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கு வழங்குகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் தீர்வு இல்லை; தேயிலை வாரியம் அறிவிக்கும் பசுந்தேயிலை நிர்ணய விலை முறையாக வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில், குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட, 8 கூட்டுறவு தொழிற்சாலைகளில், கடந்த அக்., மாத விலையான, 24.59 ரூபாய் வழங்காமல் குறைத்து வழங்கப்பட்டதால், 6 நாட்களுக்கும் மேலாக அங்கத்தினர்கள், பசுந்தேயிலை வழங்காமல் போராட்டம் நடத்தினர்.

புள்ளிவிபரத்தில் தெளிவு


குந்தா கூட்டுறவு தொழிற்சாலையில் (எடக்காடு), கடந்த, 2020ம் ஆண்டிலிருந்து, 2024ம் ஆண்டு வரை குந்தா மேற்குநாடு தேயிலை விவசாயிகள் கூட்டமைப்பு எடுத்த புள்ளிவிபரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், தேயிலை வாரியம் நிர்ணயம் செய்த மாதாந்திர தொகையிலிருந்து, கூட்டுறவு தொழிற்சாலைகள் மிகவும் குறைத்து வழங்கப்பட்டுள்ளது.

'2020ல், 18.95 ரூபாய்; 2021ல் 7.32 ரூபாய்; 2022ல், 16.52 ரூபாய்; 2023ல் 12.68 ரூபாய்; 2024ல் 11.68 ரூபாய்,' என, நிர்ணய விலையை குறைத்து வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த, 5 ஆண்டுகள் வரை ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 67.15 ரூபாய் வரை விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது.

கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கூறுகையில், ''ஆண்டிற்கு குறைந்தபட்சம், 40 லட்சம் கிலோ பசுந்தேயிலை வரை, குந்தா கூட்டுறவு தொழிற்சாலைக்கு வழங்கப்படுகிறது. அதில், பல கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு நிலுவை உள்ளது,'' என்றார்.

ரூ. 50 கோடி நிலுவை


தேயிலை வாரிய துணைத்தலைவர் ராஜேஷ் கூறுகையில், ''பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காததால், 50 கோடி ரூபாய் வரை நிலுவை வைத்துள்ள, 'இன்கோ' தொழிற்சாலைகள் உட்பட சில தனியார் தொழிற்சாலைகளுக்கு வாரியம் சார்பில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

கூட்டுறவு நிர்வாகத்தில், குறைத்து விலையை வழங்கியதால், மாநில அரசின் 'இன்கோசர்வ்' உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

தீர்வு இல்லையேல் மீண்டும் போராட்டம்

சிறுகுறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் சுப்ரமணியம் கூறுகையில், ''கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். கடந்த மாதம், 6 நாட்கள் பசுந்தேயிலையை கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் வழங்காமல் புறக்கணித்தனர். பனி பொழிவால் ஏற்படும் இழப்பை கருதி தற்காலிகமாக புறக்கணிப்பு போராட்டத்தை நிறுத்தியுள்ளனர். கடைசி முயற்சியாக, வரும், 11ல் நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவை சந்தித்து, மாநில முதல்வரை அணுக தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீர்வு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் போராட்டம் துவங்கும்,''என்றார்.



தேயிலை வாரிய உறுப்பினர் தனஞ்செயன் கூறுகையில்,''கடந்த, 2007ல் சிறு விவசாயிகள் ஐகோர்ட்டில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் ஆதார விலை நிர்ணயம் செய்ய உத்தரவிடப்பட்டது. அப்போதே, விலை நிர்ணய கமிட்டியிடம் தேயிலை துாளுக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதனை ஏற்காமல் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்து வருவதால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு தேயிலை விவசாயிகளுக்கு பாதிப்பு நீடிக்கிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஒரு கிலோ பசுந்தேயிலை உற்பத்திக்கான செலவு, 22.50 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.ஐகோர்ட் உத்தரவை முறையாக செயல்படுத்தி இருந்தால், நீலகிரி தேயிலை விவசாயம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டிருக்கும். பெரிய நிறுவனங்களின் ஆதாயத்திற்காக அப்போது தேயிலை துாள் விலை நிர்ணயம் செய்யப்படாமல் விடப்பட்டதால், இந்த பாதிப்பு தொடர்கிறது,''என்றார்.








      Dinamalar
      Follow us