/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குறைதீர்க்கும் கூட்டம் விவசாயிகள் புறக்கணிப்பு
/
குறைதீர்க்கும் கூட்டம் விவசாயிகள் புறக்கணிப்பு
ADDED : ஏப் 25, 2025 11:55 PM
கூடலுார், ; மசினகுடி வனத்துறை சார்பில், முதுமலை தெப்பக்காட்டில் நடந்த, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பங்கேற்ற விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.
முதுமலை. மசினகுடி கோட்ட வனத்துறை சார்பில், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு, மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார் தலைமை வகித்தார். வனச்சரகர்கள் தயானந்தன், பாலாஜி, தனபால் மற்றும் மசினகுடி விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசி விவசாயிகள், 'விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் குறித்த தகவல் இன்று (நேற்று) காலை தெரிவித்தனர். மேலும், கூட்டத்தை விவசாயிகள் எளிதாக வந்து செல்லக்கூடிய மசினகுடியில் நடத்தாமல், தொப்பக்காட்டில் நடத்தியது ஏற்று கொள்ள முடியாது. எனவே, கூட்டம் குறித்து, 15 நாட்களுக்கு முன் தகவல் தெரிவிப்பதுடன், கூட்டத்தை மசினகுடியில் நடத்த வேண்டும்,' என, கூறி, கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனால், கூட்டம் நடைபெறவில்லை.