/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரியல் எஸ்டேட்களுக்கு நிலம் விற்பனை ;விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம்
/
ரியல் எஸ்டேட்களுக்கு நிலம் விற்பனை ;விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம்
ரியல் எஸ்டேட்களுக்கு நிலம் விற்பனை ;விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம்
ரியல் எஸ்டேட்களுக்கு நிலம் விற்பனை ;விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம்
ADDED : மார் 20, 2024 01:17 AM

குன்னுார்;குன்னுாரில் உள்ள தேயிலை தோட்டங்களை முறைகேடாக விற்பனை செய்ததை கண்டித்து, விவசாயிகள் வேலியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுக மக்களிடம் நிலங்களுக்கு தனி பட்டா இல்லாமல், மிகவும் பழமையான கூட்டு பட்டா மட்டுமே உள்ளது.
இதனால், இங்குள்ள மக்கள் ஆவணங்கள் இல்லாமல், படுக சமூக வழக்கப்படி பாக பிரிவினை செய்து, ஒரே சர்வே எண்ணில், தனி தனியாக தேயிலை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலமாக, தேயிலை தோட்டங்கள் சமவெளியை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்து ரியல் எஸ்டேட் வியாபாரம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று குன்னுார் எடப்பள்ளி இளித்தொரை கிராம மக்களின், நிலம் புரோக்கர்கள் மூலம், சென்னை தனியார் நிறுவனத்திற்கு போலி பத்திரம் தயார் செய்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதனை தடுக்க நுாற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, நடுஹட்டி கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் நடந்து வரும் பணிக்கான, 'ஷெட்களை' அகற்றி, பசுந்தேயிலை பறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊர் தலைவர் சேகர் கூறுகையில்,'' இங்கு பூர்வீகமாக தேயிலை தோட்டங்களை அனுபவித்து வரும் நிலங்களை, சில புரோக்கர்கள் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளனர். தற்போது அவர்கள் வேலி அமைத்து, எங்களை உள்ளே விடுவதில்லை. மாவட்ட நிர்வாகம் உட்பட, மாநில உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை.
இதனால், இங்குள்ள அவரவர் தோட்டங்களில் இனி தொடர்ந்து பசுந்தேயிலை எடுப்போம். விநாயகர் கோவிலுக்கு அரை ஏக்கர் உயில் சாசனம் எழுதிக் கொடுத்த நிலமும் தனியார் நிறுவனம் சப் டிவிஷன் செய்துள்ளது. நிலங்கள் எங்களுக்கு தெரியாமல் விற்பனை செய்யப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார். இப்பகுதியில் பிரச்னை ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

