/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி பீட்ரூட் விலை உயர்வு; மகிழ்ச்சியில் விவசாயிகள்
/
ஊட்டி பீட்ரூட் விலை உயர்வு; மகிழ்ச்சியில் விவசாயிகள்
ஊட்டி பீட்ரூட் விலை உயர்வு; மகிழ்ச்சியில் விவசாயிகள்
ஊட்டி பீட்ரூட் விலை உயர்வு; மகிழ்ச்சியில் விவசாயிகள்
ADDED : நவ 12, 2024 12:38 AM

ஊட்டி; நீலகிரி மாவட்டம், ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகள், ஊட்டி சந்தைக்கு எடுத்து வந்து விற்கப்படுகின்றன. பின், தரம் பிரிக்கப்பட்டு, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.
சமீப காலமாக, ஊட்டியில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. அதில், ஊட்டி பீட்ரூட் கடந்த வாரம் கிலோ, 20 - 30 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 'ஒரு துண்டு' எனப்படும், 80 கிலோ மூட்டை, 3,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கூடுதல் லாபம் கிடைத்து வருவதால் சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.