UPDATED : நவ 12, 2026 06:58 PM
ADDED : நவ 12, 2026 06:56 PM

பந்தலுார்: கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில், தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் ஊடுபயிராகவும், தனியாகவும் பாக்கு தோட்டங்கள் உள்ளன.
தற்போது பாக்கு அறுவடை செய்து வரும் நிலையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு கிலோ தோல் உரிக்காத பாக்கு, 52 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் பாக்கு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
விவசாயிகள் கூறுகையில், ‘கேரளா மார்க்கெட்டை பின்பற்றி, பாக்கிற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனை மாற்றும் வகையில், தமிழக தோட்டக்கலைத்துறை விவசாயிகள் பயன்படும் வகையில் பாக்கிற்கு விலை நிர்ணயம் செய்து, கூடலூரில் தனியாக மார்க்கெட் ஏற்படுத்தி விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்,’ என்றனர்.
