/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொடி பீன்ஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
கொடி பீன்ஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : மே 01, 2025 11:19 PM

கோத்தகிரி; கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கொடி பீன்ஸ் அதிக பரப்பளவில் பயரிட்டு, விவசாயிகள் ஆர்வத்துடன் பராமரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் முக்கியமாக இருந்தாலும், நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில், மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு அதிக பரப்பளவில் கொடி பீன்ஸ் பயிரிடப்பட்டுள்ளது.
குறிப்பாக. கோத்தகிரி கட்டபெட்டு, ஈளாடா, நெடுகுளா, கூக்கல்தொரை மற்றும் வ.உ.சி., நகர் உள்ளிட்ட பகுதிகளில் . நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கொடி பீன்ஸ் பயிரிடப்பட்டு, விவசாயிகள்பராமரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக, நல்ல மழை பெய்து வரும் நிலையில், பயிர் செழித்து வளர்ந்துள்ளது.
பீன்ஸ் கொடிகள் தரையில் விழாமல், மேலோங்கி வளர ஏதுவாக, குச்சிகள் நடவு செய்து, ஊறவிட்டு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
தற்போது, ஒரு கிலோ கொடி பின்ஸ், மேட்டுப்பாளையம் மண்டிகளில், 100 ரூபாய்க்கும், உள்ளூர் மார்க்கெட்டில், 120 முதல், 133 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால், விவசாயிகள் பாதுகாத்து பராமரித்து வருகின்றனர்.

