/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'இ---நாம்' திட்டத்தில் விளை பொருட்கள் விற்பனை; விவசாயிகள் பங்கேற்று பயன்பெற அழைப்பு
/
'இ---நாம்' திட்டத்தில் விளை பொருட்கள் விற்பனை; விவசாயிகள் பங்கேற்று பயன்பெற அழைப்பு
'இ---நாம்' திட்டத்தில் விளை பொருட்கள் விற்பனை; விவசாயிகள் பங்கேற்று பயன்பெற அழைப்பு
'இ---நாம்' திட்டத்தில் விளை பொருட்கள் விற்பனை; விவசாயிகள் பங்கேற்று பயன்பெற அழைப்பு
UPDATED : ஆக 14, 2025 08:13 AM
ADDED : ஆக 13, 2025 08:33 PM
ஊட்டி; இ--நாம் திட்டம் வாயிலாக விவசாய விளை பொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயன் பெறும் வகையில், மத்திய அரசால் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் (இ-நாம்) செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், இணையம் வாயிலாக விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் இரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், 'இ-நாம்' திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த முறையில் ஏல நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும்.
இதில், பிற மாவட்டம் பிற ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இருந்தும் வணிகர்கள் பங்கேற்று ஏலம் கோர முடியும். துல்லியமான தர அளவுகள் உறுதி செய்யப்படுவதால் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
பண்ணை வாயிலாக வணிகம் இ--நாம் திட்டத்தில், பண்ணை வாயில் வணிகம் என்ற முறை அரசால் தற்போது நடைமுறை படுத்தப்படுள்ளது. விவசாயிகள், விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு எடுத்து வருவதற்கான ஏற்று கூலி, போக்குவரத்து செலவு குறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதன்படி, விவசாயிகளின் தோட்டத்துக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் நேரில் சென்று, 'இ-நாம்' செயலி வாயிலாக விளை பொருட்களை விற்பனை செய்து, தருவதுடன் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் கூறுகையில்,'நீலகிரி விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி, 'இ--நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம்' வாயிலாக தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம்,' என்றார்.