/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் அவசியம்
/
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் அவசியம்
ADDED : நவ 09, 2025 09:59 PM
கோத்தகிரி: கோத்தகிரி பகுதி விவசாயிகள் வேளாண் திட்டங்கள் மற்றும் பிரதம மந்திரி கவுரவ திட்டத்தில் பயன் பெற தனித்துவ அடையாள அட்டை எண் பெற வேண்டும்.
கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், பிரதம மந்திரி கவுரவ ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், பயன் பெற்று வரும் விவசாயிகள், தனித்துவ விவசாய அடையாள அட்டைஎண் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது.
தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் பொது இ--சேவை மையங்களை அணுகி, தங்களது ஆதார் எண், மொபைல் எண் மற்றும் நில ஆவணங்களை பதிவு செய்து, தனித்துவ விவசாய அடையாள எண் பெற்று பயன் பெற வேண்டும்.
தனித்துவ அட்டை எண் பெறாத விவசாயிகள், மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் மற்றும் பிரதம மந்திரி கவுரவ தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

