/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை வேண்டும்; ஊட்டியில் விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டம்
/
பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை வேண்டும்; ஊட்டியில் விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டம்
பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை வேண்டும்; ஊட்டியில் விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டம்
பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை வேண்டும்; ஊட்டியில் விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டம்
ADDED : ஜூலை 17, 2025 09:20 PM

ஊட்டி ; நீலகிரி தேயிலை கிலோவுக்கு, 40 ரூபாய் விலை கோரி அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்புடன், சிறு விவசாயிகள், ஊட்டியில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 40 ரூபாய் வழங்க கோரி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து, மத்திய, மாநில அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், 40 சதவீத விவசாயிகள் வேலை வாய்ப்புகளை தேடி வெளி மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று, ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது. அதில், 'அ.தி.மு.க., -பா.ஜ., -நா.த.க., -வி.சி.க.,- சி.பி.எம்.-சி.பி.ஐ., தே.மு.தி.க.,- த.வெ.க,' உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சியினர், ஆதரவு அளித்து போராட்டத்தில் பங்கேற்றனர். த.வெ.க., கட்சியினர் தேயிலை செடியை உடம்பில் கட்டி வந்து ஆதரவு அளித்தனர்.
போராட்டத்தை ஒருங்கிணைத்த, ஆரி கவுடர் விவசாய சங்க தலை மஞ்சை மோகன் நிருபர்களிடம் கூறுகையில்,''தேயிலைக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட கலெக்டர் தலைமையில் விலை நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது.
அதில், தேயிலை வாரிய செயல் இயக்குனர், விவசாய சங்க பிரதிநிதிகள் இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர். விலை நிர்ணய கமிட்டி வாயிலாக, குன்னுார் தேயிலை வாரியம் மாதந்தோறும் அறிவிக்கும் தேயிலைக்கான விலையை சில கூட்டுறவு தொழிற்சாலைகள் முறையாக வழங்குவதில்லை.
மேலும், பசுந்தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 40 ரூபாய் கோரிக்கை நிறைவேறவில்லை. தேயிலை வாரியம் ஏல மையத்தில் தேயிலை துாள் கிலோவுக்கு, 200 ரூபாய் நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் இதுவரை பயனில்லை. இதன் காரணமாக, கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது,'' என்றார்.