/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை செடிகளை அகற்றி காய்கறி பயிரிடும் விவசாயிகள்
/
தேயிலை செடிகளை அகற்றி காய்கறி பயிரிடும் விவசாயிகள்
தேயிலை செடிகளை அகற்றி காய்கறி பயிரிடும் விவசாயிகள்
தேயிலை செடிகளை அகற்றி காய்கறி பயிரிடும் விவசாயிகள்
ADDED : அக் 09, 2024 10:00 PM

கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், தேயிலை செடிகளை அகற்றி, காய்கறி பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் கட்டி வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக இருந்தாலும், நீர் ஆதாரமுள்ள விளைநிலங்களில் மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, இயற்கை விவசாயத்தின் மீதான ஈடுபாடு விவசாயிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
பசுந்தேயிலை ஒரு கிலோவுக்கு, 30 ரூபாய் வரை விலை கிடைப்பது விவசாயிகளுக்கு ஆறுதலாக இருந்தாலும், மலை காய்கறி சாகுபடி மேற்கொள்வதற்கான ஆர்வம் குறையவில்லை.
கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளின் விலை, சமீப காலமாக அதிகரித்து வருவதுதான் இதற்கு காரணம்.
இதனால், தேயிலை பயிரிட்டுள்ள விவசாயிகள், சில பகுதிகளில் உள்ள நீர் ஆதாரத்தை நம்பி, தேயிலை செடிகளை அகற்றி, காய்கறி பயிரிட ஏதுவாக, நிலத்தை தயார் செய்து வருகின்றனர்.