/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குறுமிளகு செடிகளை தாக்கும் வாடல் நோய் கவலையில் விவசாயிகள்
/
குறுமிளகு செடிகளை தாக்கும் வாடல் நோய் கவலையில் விவசாயிகள்
குறுமிளகு செடிகளை தாக்கும் வாடல் நோய் கவலையில் விவசாயிகள்
குறுமிளகு செடிகளை தாக்கும் வாடல் நோய் கவலையில் விவசாயிகள்
ADDED : ஏப் 11, 2025 10:00 PM

கூடலுார்,; கூடலுார் பகுதியில் தேயிலை, காபி தோட்டங்களில் ஊடுபயிராக பயிரிட்டுள்ள குறுமிளகு செடிகளை, வாடல் நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
கூடலுார்,பந்தலுார் பகுதி விவசாயிகள் தேயிலை, காபி தோட்டங்களில் ஊடுபயிராக குறுமிளகு நடவு செய்து, ஆண்டுக்கு ஒரு முறை வருவாய் ஈட்டி வருகின்றனர். மேலும், இங்கு விளையும் குறுமிளகுக்கு காரத்தன்மை அதிகம் இருப்பதால், சமவெளி பகுதிகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, நோய் தாக்குதல் குறுமிளகு செடிகள் பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து வருகிறது. நடப்பு ஆண்டு, குறுமிளகு அறுவடை முடிந்த நிலையில், இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'குறுமிளகு செடிகளில் வாடல் நோய் ஏற்பட்டு செடிகள் பாதித்து வருகிறது. இதனால், வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இந்நோயை கட்டுப்படுத்த, தோட்டக்கலை துறையினர், விவசாயிகளுக்கு உதவ வேண்டும்' என்றனர்.
தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'குறுமிளகு நடவு செய்யப்பட்டு, 30 ஆண்டுகள் முடிந்த நிலையில், அவைகளுக்கு நோய் பாதிப்பு இருக்கும். மேலும், மண்வளம் பாதிப்பு, காலநிலை மாற்றம் காரணமாக தற்போது குறுமிளகு செடிகளில் வாடல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க, மண் பரிசோதனை செய்து, தோட்டக்கலை துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி மண்வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், குறுமிளகு செடிகளுக்கு ஏற்படும் வாடல் நோயை தடுக்க முடியும்,' என்றனர்.