/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலை வரத்து உயர்ந்தும் விலை குறைவால் விவசாயிகள் கவலை
/
பசுந்தேயிலை வரத்து உயர்ந்தும் விலை குறைவால் விவசாயிகள் கவலை
பசுந்தேயிலை வரத்து உயர்ந்தும் விலை குறைவால் விவசாயிகள் கவலை
பசுந்தேயிலை வரத்து உயர்ந்தும் விலை குறைவால் விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 22, 2025 09:27 PM
கோத்தகிரி; கோத்தகிரி பகுதி தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை வரத்து உயர்ந்தாலும், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை முக்கிய விவசாயமாக உள்ளது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், இத்தொழிலை பெருமளவில் நம்பியுள்ளனர். மாவட்டத்தில் பொருளாதாரம் பெரியளவில் தேயிலை விவசாயத்தை நம்பியுள்ளது.
தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, தரத்திற்கு ஏற்ப, 18 முதல் 20 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. இடுபொருள்களின் விலையேற்றம், கூலி உயர்வு மற்றும் தோட்ட பராமரிப்பு செலவு அதிகமாக உள்ளது.
இதனால், தற்போது கிடைத்து வரும் விலை, விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. சமீபத்தில் பெய்த மழையில், உரமிட்ட தேயிலை தோட்டங்களில், அரும்பு துளிர்விட்டு, பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது.
ஆனால், தொடர் விலை வீழ்ச்சியால், விவசாயிகளுக்கு போதிய வருமானம் இல்லாமல், இழப்பு அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.