/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை நீரில் மூழ்கிய நெற் பயிர்: கவலையில் விவசாயிகள்; மக்கள் ஆறுகளை கடந்து செல்வதை தவிர்க்க அறிவுரை

ADDED : டிச 03, 2024 05:55 AM

கூடலுார்; கூடலுாரில் பெய்த கனமழையில், வயல்களில் மழை வெள்ளம் புகுந்து நெற்பயிர் மூழ்கியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுாரில் நேற்று முன்தினம் இரவு, துவங்கிய கனமழை விடிய, விடிய பெய்தது. தொடர்ந்து, பாண்டியார் - புன்னம்புழா, மாயாறு ஆறுகள் அதன் கிளை ஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.
அதில், ஸ்ரீமதுரை, குனில், அள்ளூர்வயல் பகுதிகளில், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. பல இடங்களில் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால், நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கூடலுாரில் பருவ மழை குறைந்து கடந்த சில வாரங்களாக மிதமான காலநிலை நிலவியது. இதனால், நெற்கதிர் அறுவடை துவங்க இருந்த நிலையில், இரவு திடீரென பலத்த மழை பெய்தது. பல இடங்களில், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்பை ஏற்படுத்துள்ளது. இதனால், ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய அரசு, நிவாரணம் வழங்க வேண்டும்,' என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'கூடலுாரில் தொடரும் மழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் ஆற்றின் கரைகளுக்கு செல்வதையும், ஆறுகளை கடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.