/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் 'பாஸ்ட்டேக்' பணி; இரண்டு நாட்கள் பைக்காரா ஏரி மூடல்
/
சாலையில் 'பாஸ்ட்டேக்' பணி; இரண்டு நாட்கள் பைக்காரா ஏரி மூடல்
சாலையில் 'பாஸ்ட்டேக்' பணி; இரண்டு நாட்கள் பைக்காரா ஏரி மூடல்
சாலையில் 'பாஸ்ட்டேக்' பணி; இரண்டு நாட்கள் பைக்காரா ஏரி மூடல்
ADDED : ஜூலை 21, 2025 09:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: பாஸ்ட்டேக் சோதனை சாவடி அமைக்கப்படுவதால் இரண்டு நாட்கள் பைக்காரா படகு இல்ல ஏரி மூடப்படுகிறது.
சர்வதேச சுற்றுலா தலமான ஊட்டிக்கு ஆண்டுதோறும், 35 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இங்கு வரும் வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் குறிப்பாக, ஊட்டி - - கூடலுார் சாலையில் உள்ள பைக்காரா ஏரியில் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில்,''பைக்காரா ஏரிக்கு செல்லும் நுழைவு வாயிலில் பாஸ்ட்டேக் சோதனை சாவடி அமைக்கப்படுவதால் நாளை மற்றும் நாளை மறுதினம் பைக்காரா படகு இல்லம் மூடப்படுகிறது,''என்றார்.