/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழைய ஓய்வூதிய திட்டம்; அமல்படுத்த உண்ணாவிரதம்
/
பழைய ஓய்வூதிய திட்டம்; அமல்படுத்த உண்ணாவிரதம்
ADDED : ஜன 08, 2024 11:34 PM
குன்னுார்:அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
குன்னுார் அருகே அருவங்காடு பகுதியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில், 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, புதிய ஓய்வூதியத்தை அகற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி, ஜே.எப்.ஆர்.ஓ.பி.எஸ்; ஏ.ஐ.டி.இ.எப்., சார்பில், தொழிற்சாலை கேட் பகுதியில், 96 மணி நேர உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.
அதில், சி.எப்.எல்.யு., பொது செயலாளர் ஹரி சுப்ரமணியன் தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து, 2வது குழு சார்பில் துணை தலைவர் ஆரோக்கிய நாதன் தலைமையில் நடந்தது.
நாட்டில் பாதுகாப்பு துறையில் உள்ள, 41 தொழிற்சாலைகளில் பணியாற்றும், 84 ஆயிரம் தொழிலாளர்களின் கோரிக்கையான, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.